தண்டு மாரியம்மன் திருக்கோவில் உற்சவ பெருவிழா

தண்டு மாரியம்மன் திருக்கோவில் உற்சவ பெருவிழா

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 

சுப்பிரமணியபுரம் தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடந்த 70 வது ஆண்டு உற்சவ பெருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் அருந்ததியர் தெருவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவில் 70 வது ஆண்டு உற்சவம் பெருவிழாைவை முன்னிட்டு வைகை ஆற்றுக்குச் சென்று பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது, இதில் 500க்கும் மேற்பட்ட தாய்மார்கள், பெரியோர்கள் பால்குடம் எடுத்தும் அழகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர், அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

இந்த அன்னதானத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை விழா குழு தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மரக்கடை முத்து, இணை தலைவர் எட்வின் பிரபுராஜ், செயலாளர் சப்பாணி கணேசன், துணைச் செயலாளர் வேளார் முருகன், இணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் காளியப்பன், துணை பொருளாளர் வீரன், இணை பொருளாளர் வேலுச்சாமி, கோவில் பூசாரி மதுரை வீரன், துணை பூசாரிகள் அழகர், வேலுச்சாமி, கோயில் பணியாளர் சாந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்,

Tags

Next Story