தாட்கோ மூலம் மானிய கடன்: ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் மானிய கடன்: ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மானிய கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினஇளையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற பெயரில் ரூ.40 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.

இந்த புதிய திட்டத்தின் படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்ட தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3½ லட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கப்பட உள்ளது.

அதேபோல் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story