மீனவா்களுக்கு மானிய விலையில் இயந்திரங்கள் : அமைச்சா் வழங்கினார்!
இயந்திரங்கள் வழங்கும் விழா
ஆலந்தலையில் மீனவா்களுக்கு மானிய விலையில் இயந்திரங்களை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் தமிழக மீன்வளத் துறை சாா்பில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்களுக்கு அரசின் மானிய விலையில் வெளிபொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் மீன்வளம் - மீனவா் நலன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று 28 மீனவா்களுக்கு இயந்திரங்களையும், 2 பேருக்கு ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் (பொறுப்பு) பிரபு, வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆலந்தலை பங்குத்தந்தை சில்வஸ்டா், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மீன்வளத் துறை உதவி இயக்குநா் அன்டனி பிளஸ்ஸி வயலா, ஆய்வாளா் ஜெகன், மேற்பாா்வையாளா்கள் மாரியப்பன், சிவா, மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள் சங்கத் தலைவா் கயஸ், திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், மீனவரணி மாவட்ட அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, உள்ளிட்டோா் பங்கேற்றனா். மீன்வளத் துறை மண்டல இயக்குநா் காசிநாத பாண்டியன் வரவேற்றாா். உதவி இயக்குநா் புஸ்ரா சப்னம் நன்றி கூறினாா்.
Next Story