சோயா பீன்ஸ் சாகுபடி செய்ய மானியம்
தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு சோயா விதைகள் விநியோகிக்கப்படுகிறது என் வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் சோயா விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் சமையல் எண்ணெய் வித்து பயிர்களின் பரப்பு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விவசாயிகளுக்கு சோயா சான்று விதைகள் 50 சத வீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஹெக்டேருக்கு 65 கிலோ விதை வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ98ல் ரூபாய் 48 விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக ரூபாய் 300 பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
சோயா சாகுபடி செய்யும் விவசாயிகளை சக்தி சோயா நிறுவனத்தின் கள அலுவலர்கள் பார்வையிட்டு அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனையும், உற்பத்தி செய்யப்படும் சோயா விதை கொள்முதலிலும் ஈடுபட உள்ளனர். எனவே நமது மதுக்கூர் வட்டார விவசாயிகள் சோயா பயிர் சாகுபடியில் ஈடுபட்டு நுகர்வோர்களின் எண்ணெய் வித்து தேவை யையும் பூர்த்தி செய்து அந்நிய செலாவணியையும் மிச்சப்படுத்தலாம். ஆர்வமும், விருப்ப முள்ள விவசாயிகள் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.