தரமற்ற தார்சாலை பணி - தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்க்கத் தியானூர் புதுப்பட்டு பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் காடவள்ளி ஏறி வரை செல்லும் சாலை சுமார் 11_56 லட்சம் மதிப்பிலான பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணி ஒரு வருட காலமாக நடைபெற்று வருகின்றது. வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவருக்கு ஒப்பந்தம் போடப்பட்டு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தரமற்ற முறையில் தார் சாலை அமைப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
பேட்டிமுறையான தார் ஆயில் போடாமல் காய்ந்த தரையில் மன் துகள்களின் தூசி கூட பெருக்காமல் தண்ணீரை தரையின் மீது தெளித்து போடப்பட்டு வரும் தரமற்ற தார் சாலை மழைக்கே தாங்காது! இருசக்கர வாகனங்கள் சென்றாலே தார்சாலை பியர்ந்து விடும் கனரக வாகனங்களுக்கு தாங்குமா? என்று குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் அதுமட்டுமின்றி இந்த சாலையின் வளைவில் மற்றும் இணைப்பு சாலையின் குறுக்கே வேககட்டுபாட்டு தடை இல்லாமல் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது உயிர் சேதம் தடுக்க வேக கட்டுப்பாட்டு தடை அமைக்க கூறினால் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தரமான முறையில் தார் சாலை அமைக்க வேண்டும் உயிர் சேதம் தடுக்க வேக கட்டுப்பாட்டு தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்