கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி விலை திடீர் வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி விலை திடீர் வீழ்ச்சி

 கன்னியாகுமரியில் முந்திரி விலை திடீரென வீழ்ச்சி அடைந்தத்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

கன்னியாகுமரியில் முந்திரி விலை திடீரென வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்ணீர் கிடைக்காத வறட்சியான நிலப்பகுதிகளிலும் வளரும் முந்திரி தோட்டங்கள் நிறைந்துள்ளது. இதை குமரி மாவட்ட பேச்சு வழக்கில் அண்டி என அழைப்பர். குமரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதமான கோடைகாலத்தில் முந்திரி சீஸனாக உள்ளது. ஆண்டிற்கு இரு மாதங்கள் பலன் தரக்கூடியதாக இருந்தாலும், பிற தோட்ட பயிர்களை போல் விவசாய செலவு, முதலீடு எதுவும் இதற்கு தேவை இல்லை. தண்ணீர் இல்லாத வறட்சியான நிலங்களிலும் செழிப்பாக வளரும் முந்திரி மரங்கள் கோடைகால்த்தில் நல்ல மகசூல் தருகின்றன. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் வெயில் அதிகமுள்ள பகுதிகளில் முந்திரி தோட்டங்கள் உள்ளன.

தற்போது சீஸன் என்பதால் கொத்து கொத்தாக முந்திரி காய்த்து குலுங்குகின்றன. இதனுடன் உள்ள கொல்லாம்பழம் மரத்தில் மஞ்சள், சிவப்பு, இளம்பச்சை போன்ற நிறங்களில் அழகாகக காட்சியளிக்கிறது. குமரி மாவட்டத்தில் தினமும் 200 டன்னிற்கு மேல் முந்திரி அறுவடை செய்து விற்பனை செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள கடைகள் முதல் பெரிய சந்தைகள் வரை இந்த முந்திரியை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

ஆனால் தற்போது அதிக மகசூல் உள்ளதால் விலை சரிந்துள்ளது. கிலோ ரூ.95க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதுகுறித்து முந்திரி விவசாயிகள் கூறுகையில்; முந்திரி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.200க்கு கொள்முதல் செய்யவேண்டும் என்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story