வடபழனி ஆற்காடு சாலையில் திடீர் ராட்சச பள்ளம்.

வடபழனி ஆற்காடு சாலையில் திடீரென ஏற்பட்ட 9 அடி அகல ராட்சச பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வடபழனியில் சாலையில் திடீரென 9 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மெட்ரோ பணி காரணமாக ஏற்கனவே அந்த பகுதியில் சாலை குறுகலாக இருக்கக்கூடிய நிலையில் திடீரென 9 அடி நீளத்திற்கு பள்ளம் விழுந்ததுள்ளது. இந்த சாலை போரூர் முதல் ஜெமினி மேம்பாலத்தை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. அருகில் வடபழனி சமூக நல மருத்துவமனையில் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர், அவர்களும் இதனால் பாதிப்படைந்தனர்.

இரவு நேரங்களில் ராட்சச இயந்திரங்கள் கொண்டு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இயந்திரத்தின் அதிர்வில் பள்ளம் விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதியில் பேரி கார்டுகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். மெட்ரோ பணியாளர்கள் பள்ளத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story