கும்பகோணம் சாலையில் திடீா் பள்ளம்

கும்பகோணம் சாலையில் 4 அடிக்கு திடீா் பள்ளம் ஏற்பட்டது.
கும்பகோணம் சாலையில் திடீா் பள்ளம் கும்பகோணம் பழைய மீன் மாா்க்கெட் எதிரே உள்ள சாலையில் நேற்று காலை திடீரென்று சுமாா் 4 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீஸாா் சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை நிறுத்தினா். மேலும், தஞ்சையில் இருந்து கும்பகோணம் மற்றும் கும்பகோணம் வழியாக பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனா். இந்த சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்து. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து உடனே போர்க்கால அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் மூலம் உடைந்த குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இப்பணி ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story