சாமிப்பிள்ளை புதூரில் திடீர் மழை... கிராம மக்கள் மகிழ்ச்சி

மூன்று மாதம் கழித்து மழை பெய்ததால், சாமிப்பிள்ளை புதூர் பொதுமக்கள் மகிழ்ச்சி.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கீரனூர் ஊராட்சியில் உள்ள சாமிபிள்ளை புதூர் பகுதியில் இன்று திடீர் மழை பெய்தது. தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழை துவங்கி 10 நாட்களுக்கு மேலாகியும், இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர். இன்று திடீரென மதியம் 12 மணி அளவில் பெய்த மழையால், கிராம மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தாலும், மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சின்னம்மாள் என்ற மூதாட்டி, 'கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாமல் இருந்த நேரத்தில், திடீரென மழை பெய்ததால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது' என தெரிவித்தார்.

Tags

Next Story