பாதாள சாக்கடை பணியில் திடீர் பள்ளம்
பாதாள சாக்கடை பள்ளம்
காரைக்குடியில் பாதாள சாக்கடை பணியில் திடீர் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியின் 36 வார்டுகளிலும் கடந்த 2017ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டு சாலைகள் நடுவில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து. இத்திட்டதிற்காக 140 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில் கடந்தாண்டு திட்டம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவடையாத ஒரு சில பகுதிகளில் கழிவு நீர் செல்ல குழாய் பதித்து ஆள் நுழைவு குழியில் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை உரிய முறையில் மூடாமல் சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது கனமழை பெய்ததால் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அவ்வழியே சென்ற சிமெண்ட் செங்கல் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது. லாரி ஓட்டுநர் லாரியை மீட்க கடும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டதில் மற்றொரு எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிக்கிக் கொண்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததால் சாலையில் மீண்டும் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி அவதி படும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story