குளச்சலில் மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் திடீர் மறியல் 

குளச்சலில் மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் திடீர் மறியல் 

சாலை மறியல் 

மீனவர்கள் சிறைபிடிப்பு கண்டித்து குளச்சலில் மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடந்த வாரம் வழக்கம்போல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். கடந்த 19 ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குளச்சல் பகுதி 5 விசைப்படகுகளில் இருந்த 73 மீனவர்களையும் மற்றும் ஒரு கேரள விசைப்படகையும், அதிலிருந்த 13 மீனவர்கள் உட்பட 86 பேரை தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து, தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்த குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் (குளச்சல்)நிர்வாகிகள் விரைந்து தூத்துக்குடி சென்றனர். அங்கு மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தூத்துக்குடி மீனவர்களுடன் தொடர்ந்து 3 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் விசைப்படகுகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 3 நாட்கள் ஆகியும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்,விசைப்படகுகள் விடுவிக்காததை கண்டித்து இன்று குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம்,கட்டுமர மீனவர்கள் திடீர் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மீன் பிடிக்க செல்லாத விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகளிலிருந்து மீன்கள் இறக்கப்படவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள குளச்சல் மீனவர்கள் தொடர்ந்து துறைமுகத்தில் தர்ணா நடத்தினர்.

இதற்கிடையில் திடீர் என குளச்சல் பீச் சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குளச்சல் போலீஸ் ஏ எஸ் பி .பிரவீன் கவுதம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story