தென்காசியில் பொதுமக்கள் திடீா் மறியல்
தென்காசியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசி நகராட்சி 5ஆவது வாா்டு பகுதியை சோ்ந்த பொதுமக்கள், தங்களுடைய வாா்டு பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து, தங்களுடைய வாா்டு பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், காவல்துறையினா், நகா்மன்ற உறுப்பினா் காா்த்திகா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனா். இப்போராட்டம் காரணமாக தென்காசி- திருநெல்வேலி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story