அடிக்கடி அடைக்கப்படும் ரயில்வே கேட்டால் அவதி

X
ஜி.டி.என்.,ரோட்டில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கும்படும் நிலையில், அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
ஜி.டி.என்.,ரோட்டில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கும்படும் நிலையில், அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் அடியிலிருந்து ரவுண்ட்ரோடு ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஜி.டி.என்.,ரோடை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவ்வழித்தடத்தில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இங்கு அடிக்கடி பழநி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வந்து செல்கின்றன. ரயில்கள் வரும் நேரத்தில் குறைந்தது 15 நிமிடத்திற்கும் மேல் ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள், முதியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story