டாஸ்மாக் கடையால் அவதி
செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர்.
செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில், ராஜாஜி மார்க்கெட், மேட்டுத் தெரு, செங்கழுநீரோடை வீதி, நெல்லுக்கார தெரு ஆகிய நான்கு இடங்களில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளால், நகரவாசிகள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இதில், பலகட்ட போராட்டங்களுக்கு பின், மேட்டுத் தெரு, நெல்லுக்காரத் தெருவில் இருந்த இரு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மற்ற இரண்டு கடைகள் தற்போது செயல்படுகின்றன. இதில், செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர். சங்கர மடத்திலிருந்து, கம்மாளத் தெரு செல்ல முடியாமலும், கம்மாளத் தெருவில் இருந்து, சங்கர மடம் வழியாக பிற இடங்களுக்கு செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். டாஸ்மாக் கடைக்கு வருவோர், சாலையோரத்திலேயே தங்களது வாகனங்களை நிறுத்துவதால், இருபுறத்திலும் ஏராளமான டூ - வீலர்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கார், பேருந்து போன்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கி, மெல்ல நகர்கின்றன. டாஸ்மாக் கடையால் அன்றாடம் அவதிப்படுவதால், செங்கழுநீரோடை வீதியில் இருந்து கடையை மாற்ற வேண்டும் என, நகர வாசிகள், வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்."
Next Story