பல்லாங்குழி சாலையால் அவதி - தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

பல்லாங்குழி சாலையால் அவதி - தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

10மாதமாக முடியாத சாலை பணி

பொன்னமராவதி அருகே மலையடிப்பட்டியில் மந்த கதியில் சாலை பணிகள் நடைபெறுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் ஊராட்சி மலையடிப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. செவலூரில் இருந்து மலையப்பட்டி வழியாக பிரசித்தி பெற்ற கஞ்சாத்துமலை முருகன் கோயிலுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை அமைக்க வலியுறுத்தி நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை எடுத்து நபார்டு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டு ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன.

ஆனால் சாலை பணி என்னும் முடிவடையவில்லை. இந்த ஜல்லி கற்களால் மற்றும் சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடிப் பஞ்சராவதுடன் அடிக்கடி பழுதாவதால் பள்ளி ,கல்லூரி மாணவர்கள் தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மக்கள் பிரதிநிதிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்

Tags

Next Story