வயிற்று வலியால் அவதி - பெண் தற்கொலை முயற்சி
பைல் படம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்தகசிநாயக்கன்பட்டி பகுதியில் வயிற்று வலி காரணமாக மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரிய பெரியகசி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பூபதி இவருடைய மனைவி சந்தியா இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தியா வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார் உடனடியாக அவரது உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இதைக் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது