வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விரத்தியில் விஷம் குடித்து தற்கொலை !
மருத்துவமனை
வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விரத்தியில் விஷம் குடித்து தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விரத்தியில் விஷம் குடித்து தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, லாலாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட கள்ளபள்ளி, தெற்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன் வயது 54. மதியழகன் கடந்த ஒரு மாதமாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு உடல்நிலை சீராக வில்லை. இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி மதியம் 12 மணியளவில் மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் விரக்திஅடைந்த மதியழகன், பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மதியழகன், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த மதியழகன் மனைவி ஜெயமணி இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மதியழகன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல் துறையினர்.
Next Story