சாலையோரம் ஆக்கிரமித்து கன்டெய்னர்களை நிறுத்துவதால் அவதி

சாலையோரம் ஆக்கிரமித்து கன்டெய்னர்களை நிறுத்துவதால் அவதி

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கன்டெய்னர்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கன்டெய்னர்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் சர்வீஸ் சாலையில், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில், கன்டெய்னர் லாரிகள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், சாலை குறுகலாகி, நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், அந்த வழியே செல்லும் வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகள் மீது மோதி, விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story