வங்கி ஏடிஎம் மையத்தில் அடிக்கடி ஒலி எழுப்பும் அலாரத்தால் அவதி

ராசிபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் அடிக்கடி அலாரம் ஒலி எழுப்புவதால், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டு தெரு அருகே நாமக்கல் சாலை பகுதியில் உள்ள லட்சுமி விலாஸ்(DBS) தனியார் வங்கி ஏடிஎம் அலாரம் அடிக்கடி தானாக அபாய ஒளி எழுப்பவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்,கடை வியாபாரிகள், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மேலும் இதனால் அடிக்கடி ஒழிக்கும் அலாரம் சத்தம் எழுப்பும் கருவியை விரைவில் சீரமைக்க வங்கி நிர்வாகம் முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அபாய அலார சத்தம் அடிக்கடி இரவு நேரம் பகல் நேரம் என தொடர்ந்து அடித்துக் கொண்டே இருப்பதால் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். ஏடிஎம் சென்டருக்கு நிஜமாகவே திருடர்கள் யாராவது வந்தால் கூட அதை அதை கவனிக்க முடியாத சூழல் உள்ளது.

இந்த ஏடிஎம்முக்கு பாதுகாப்பு பணிக்கு யாரும் இல்லாத சூழலால் மேலும் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக இந்த சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் இந்த அபாய ஒலியை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags

Read MoreRead Less
Next Story