பொங்கல் பானை செய்ய மண்‌ கிடைக்காமல் அவதி

கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால், பொங்கல் பானை செய்ய மண்‌ அள்ள முடியாமல் மண்பாண்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அவதிப்படுகின்றனர்.

பூவந்தியில் தை பொங்கல் திருநாளுக்காக பொங்கல் பானைகள் தயாரிப்பது வழக்கம், பூவந்தியைச் சுற்றியுள்ள கண்மாய்களில் இருந்து மண் எடுத்து வந்து சலித்து சுத்தம் செய்து அதில் இருந்து பானைகள் தயாரிக்கின்றனர். கால்படி, அரைபடி, ஒரு படி என்ற அளவில் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்கள் இயந்திரத்தில் வைத்து பானை தயாரிக்க கீழ் பகுதியை பெண்கள் தட்டி தட்டி பானை வடிவத்திற்கு கொண்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு ஆண், ஒரு பெண் இணைந்து ஐம்பது பானைகள் வரை தயாரிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக கண்மாய்களில்தண்ணீர் இருப்பதால் மண் எடுக்க முடியவில்லை. மழை காரணமாக சேமித்து வைத்திருந்த மண் கரைந்து சென்ற நிலையில் போதிய மண் கிடைக்காததால் தயாரிப்பாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பூவந்தி பொங்கல் பானைகளை சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விரும்பி வாங்குவார்கள், இப்பகுதியில் பொங்கல் திருநாளன்று மண் அடுப்பில் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள், பானைகளுக்கு ஆர்டர் கிடைத்தும் மண் கிடைக்காததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன

Tags

Next Story