வயிற்று வலியால் அவதிப்பட்ட பள்ளி சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை
பைல் படம்
மூன்று மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பள்ளி சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கடவூர் தாலுகா, டி. இடையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவரது மகள் 14 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அந்த பள்ளிச் சிறுமி, விரக்தியில் டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 3- மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்குச் சென்ற சுரேஷ் வீடு திரும்பியதும், தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும்,இது தொடர்பாக பாலவிடுதி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பள்ளி சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அருகிலுள்ள ,திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.
Next Story