எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை டிஆர்ஓ, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023- 24ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணி தொடங்கியது, இதில் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில். மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன்,ஆகியோர் கலந்துகொண்டு , சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அரவை பணியை, அனைத்து விவசாயிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

சர்க்கரை ஆலையில் நடப்பு அரவைப்பருவத்திற்கு 10,616 ஏக்கர் பதிவு கரும்பு பரப்பளவிலிருந்து 3.25 லட்சம் மெட்ரிக்டன்கள் அளவிற்கு மகசூல் எதிர்பார்க்கப்பட்டு ஆலை அரவை மேற்கொள்ளப்படவும், 9.85 சதவீதம் அளவிற்கு சராசரி சர்க்கரைக்கட்டுமானம் எடுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. ' தினசரி ஆலை அரவை 3,000 மெட்ரிக்டன் அளவிற்கு மேற்கொள்ளப்படவும், மொத்தம் 110 நாட்கள் அளவிற்கு அரவை மேற்கொள்ளப்படவும்,

எதிர்வரும் 31-03-2024 அன்று ஆலை அரவை நிறுத்தம் செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு அரவைப்பருவத்திற்கு கரும்பு சப்ளை செய்துள்ள பதிவு விவசாயிகளுக்கு ரூ.2968.87 வீதம் நியாயமான ஊதிய விலை வழங்கப்பட உள்ளது. மேலும் மொத்த மகசூல் மதிப்பீட்டு அளவான 3.25 லட்சம் மெ.டன் கரும்பளவில் சுமார் 10,000 மெட்ரிக்டன் அளவிற்கு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அவ்வாலைக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலையிலிருந்து கரும்பு பரிமாற்றம் செய்யப்படவும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாஸ்கர் இறையூர் சர்க்கரை ஆலை தலைமை அலுவலர்கள்ஆனந்தன், தங்கவேல், பெரியசாமி தன்ராஜ் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட திரளான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story