காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்
திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 501 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர் இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மருத்துவக்குடியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுதா, வாக்கு கேட்க வந்தபோது தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் வேட்பாளரை வழிமறித்து 501 நாளாக போராடிவரும் எங்களுக்கு தீர்வு சொல்லிவிட்டு செல்லுங்கள் என்று வேட்பாளர் வழிமறைத்ததால் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து காவல்துறைக்கும் கரும்பு விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு அதனைத் தொடர்ந்து விவசாயிகளை கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற வாக்குறுதி அளித்துவிட்டு அங்கிருந்து வேட்பாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர்.