கரும்பு விவசாயிகளின் தேர்தலை புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு

மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதுவரை கரும்பு விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக பாபநாசம்,கபிஸ்தலம், சுவாமிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டியை ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story