திருப்பத்தூர் மாவட்டம் கரும்பு விவசாயிகள் வேதனை!

திருப்பத்தூர் மாவட்டம் கரும்பு விவசாயிகள் வேதனை!

திருப்பத்தூர் மாவட்டம் கரும்பு விவசாயிகள் வேதனை!

கேத்தாண்ட பட்டி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை செயல்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கி மூன்று நாட்கள் ஆகியும் அரவை தொடங்காததால் விவசாயிகள் வேதனை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கேத்தாண்டப்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா கடந்த 30 ஆம் தேதி துவங்கி மூன்றுநாள் ஆகியது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்து லாரி லாரியாக ஆக ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் டிராக்டர்கள் மூலம் கரும்புகளை கொண்டு வந்து குவித்தனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இதுவரை கேத்தாண்டப்பட்டி கரும்பு ஆலையில் கரும்பு அரவை தொடங்காததால் கரும்பு விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் கரும்பு அரவை விழா தொடங்குவதற்கு விவசாயிகளுக்கு முறையாக அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர்

Tags

Next Story