செய்யாறு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணி தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த தென்தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ளது செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை.1988 இல் தொடங்கப்பட்ட இந்தஆலை தென்கிழக்கு ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஆலையாகும். தொடர்ந்து 34-ஆவது ஆண்டாக கரும்பு அரைவைப் பணி தொடக்க விழா சர்க்கரை ஆலையில் நடைபெற்றது.
தலைமைக் கரும்பு அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் கே.கண்ணன் அனைவரையும் வரவேற்றார். 2023-24 ஆண்டுக்கான கரும்பு அரைவை சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்கயாகம் வளர்த்து தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணா மலை வடக்கு மாவட்ட திமுக செய லாளர் எம்.எஸ். தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு அரைவைப் பணியை தொடங்கி வைத்தனர். சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் காமாட்சி நாளொன் றுக்கு சராசரியாக 2,500 டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டு, மொத்தத்தில் சுமார் 2.50 லட்சம்டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் (திமுக) க.லோக நாதன், அனக்காவூர் ஒன்றியக் குழுத் தலைவர் திலகவதி ராஜ் குமார், தென்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஒன் றியச் செயலாளர்கள் ஜேசிகே. சீனுவாசன், சி.கே.ரவிகுமார் மற் றும் ஆலை அலுவலர்கள், கரும்பு விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.