தீராத வயிற்று வலியால் தற்கொலை

தீராத வயிற்று வலியால் தற்கொலை

தீராத வயிற்று வலியால் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தீராத வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே ஆவாரங்குடியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய பிரபு (40). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் வயிற்றுவலி குணமாகாததால் நேற்று வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அருகிலிருந்தவர்கள் இவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story