வயிற்று வலியால் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், சின்னப்பேராளியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக விஷம் அருந்தியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சின்னப்பேராளி பகுதியைச் சார்ந்தவர் லிங்கம். இவருடைய மனைவி கருப்பாயி லிங்கத்திற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக குடிப்பழக்கத்தினால் அவருக்கு வயிற்று வலி அதிகரித்து வந்ததாகவும் இதை அடுத்து வயிற்று வலியை தாங்க முடியாமல் அவர் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து இதை அறிந்த குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story