திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை

தற்கொலை 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைரெட்டி தெருவில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ரெட்டி தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் வினோத்(24). கட்டட மேஸ்திரி. சில ஆண்டுகளுக்கு முன் இவரது தாய் இறந்தார்.மேலும் தந்தை கணேசன் திருப்பத்துாரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த வினோத் வீட்டில் தனியாக இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் அங்கு சென்று தற்கொலை செய்து கொண்ட வினோத் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story