குடிக்க பணம் தராத விரத்தியில் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், சித்துப்பட்டியில் குடிக்க பணம் தராத விரத்தியில் தற்கொலை வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னவாசல் அருகே உள்ள சித்துப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (38) இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவதன்று இளையராஜா அவரது மனைவி ராணி என்பவரிடம் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவரது மனைவி ராணி பணம் தரமுடியாது என கூறிவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் ஆத்திரமடைந்த இளையராஜா தூக்கிட்டு தற்கொலை முயன்ற நிலையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று உயிரிழந்தார்
Next Story