கனக முத்து மாரியம்மன் கோவிலில் கோடை அபிஷேக விழா

கனக முத்து மாரியம்மன் கோவிலில் கோடை அபிஷேக விழா

கனக முத்து மாரியம்மன் கோவிலில் கோடை அபிஷேக விழா

கும்பகோணம் கனக முத்து மாரியம்மன் கோவிலில் கோடை அபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் சிங்காரதோப்பு அரசலாற்றங்கரையில் எழுந்தருளும் கானகத்துமாரியம் மன் கோயிலில் 70வது ஆண்டு வசந்த பாலாபிஷேகம் மற்றும் கோடாபிஷேக விழா நடந்தது. விழாவைமுன்னிட்டு கடந்த 5ம்தேதி காப்பு கட்டுதல், துவ ரங்குறிச்சி அரசலாற்றில் இருந்து மங்கள வாத்தியங் கள் முழங்க பெண்கள் பூதட்டுகள் ஏந்தி வந்து கானகத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவுடன் திருவிழா தொடங்கியது.

இதையடுத்து 12ம்தேதி காவிரிஆறுசக்கரப்படித்துறையில் இருந்து பக்தர் கள் பால்குடம், சக்திகரகம், சக்தி அக்னிசட்டி எடுத்து வந்து கானகத்துமாரியம்மனுக்கு வசந்த பாலாபிஷே கம் மற்றும் கோடாபிஷேகமும், 13ம்தேதி விசேஷ அபிஷேகம், ஆராதனையும், மதியம் அன்னதானமும், இரவு அன்னவாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி யுலா நடந்தது. (17ம்தேதி) மாலை விடையாற்றிவிழாவும், மஞ்சள் நீராட்டு விழாவுடன் பாலாபிஷேகம் மற்றும் கோடாபிஷேக விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன்மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story