சிறார்களுக்கான கோடைகால கலை பயிற்சி முகாம்

சிறார்களுக்கான கோடைகால கலை பயிற்சி முகாம்

கோடைக்கால கலைபயிற்சி

விராலிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் சிறார்களுக்கான கோடைகால கலைபயிற்சி முகாம் நடைப்பெற்றது.

விராலிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் சவகவர் சிறுவர் மன்றம் ஆகியவற்றின் சார்பில் ஐந்து முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம் பத்து நாட்கள் நடந்தது. இதில் சிலம்பம், வாய்ப்பாட்டு பரதம், ஓவியம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி நிறைவு நாளில் பயிற்சி முடித்த சிறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழகம் முன்னாள் தலைவர் பூபாலன் தலைமையில் நடந்தது.

நாட்டுப்புற கலைஞர் நல வாரிய உறுப்பினர் மணவை சிங்காரவேலன், தலைமையாசிரியர் சசிகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி சிவக்குமார், பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் 40 இடங்களில் நடந்த பயிற்சியில் விராலிமலையில் அதிகபட்சமாக 138 சிறுவர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலை பயிற்றுநர்கள் சியாமளா ஷர்மிளா பெல் சிீட் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் சிலம்பு பயிற்சி ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்றார் சியாமளா நன்றி கூறினார்.

Tags

Next Story