கோடை வெயில்- நீர்,மோர் பந்தல் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

கோடை வெயில்- நீர்,மோர் பந்தல் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

பைல் படம் 

கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை நீர் மோர் பந்தல்கள் திறக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலநிலைக்கு பெயர் போன கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக 100 டிகிரி பாரன்ன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.வழக்கமாக மே மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் கோவையில் வெப்பநிலை குறைவாகவே காணப்படும்.ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பிற மாவட்டங்களுக்கு இணையாக கோவையில் வெப்ப நிலையானது நிலவி வருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்ககும் வகையில் அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.தாகத்தை தணித்து கொள்ள நீர் மோர் பந்தல்களில் ஏழை எளிய மக்கள் குவிந்து வருகின்றனர்.கோவை உக்கடம் பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு மோர், குளிப்பனம்,நீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.அதே வேளையில் பேருந்து நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் சார்பாகவே நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story