விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.
விராலிமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்தக் கோடை மழையால் இதமான சூழல் அப்பகுதியில் நிலவியது.