தர்மபுரியில் கொட்டி தீர்த்த கோடை மழை

தர்மபுரியில் கொட்டி தீர்த்த கோடை மழை

கோடை மழை

தர்மபுரி நகரப் பகுதியில் நல்லம்பள்ளி ஒட்டப்பட்டு பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தினந்தோறும் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து, பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி தாண்டி நிலவி வரும் சூழலில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக நூற்றி நான்கு டிகிரயை தாண்டி வெப்பம் நிலவுகிறது.இன்று 108.5 டிகிரி வெப்பநிலை சூழலில் இன்று மாலை 6.30 மணி அளவில் தர்மபுரி நகரப் பகுதி, நல்லம்பள்ளி ஒட்டப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது கோடை வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு திடீரென பெய்த இந்த கோடை மழை குளிர்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story