விக்கிரவாண்டியில் கோடை மழை,

விக்கிரவாண்டியில் கோடை மழை,

மழை 

விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் புழுக்கத்தால் அவதியுற்று வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கோடை மழை பரவலாக பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டியில் இன்று காலை முதலே வானத்தில் கரு மேகங்கள் திரண்டன.

அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பொழிந்தது. விக்கிரவாண்டி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்களும், மானாவாரி பயிருக்கு ஏற்றமழை என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story