கோடை கால சிறப்பு சாகுபடி திட்ட முறைகள் - ஆட்சியர் அறிவுறுத்தல்

கோடை கால சிறப்பு சாகுபடி திட்ட முறைகள் - ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆட்சியர் பிருந்தா தேவி

கோடை காலத்தில் விவசாயிகள் சிறப்பு சாகுபடி திட்ட முறைகளை கையாள வேண்டும் என மாவட்ட கலெக்டர் இரா.பிருந்தா தேவி அறிவுறுத்தி உள்ளார்

சேலம் மாவட்ட கலெக்டர் இரா.பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோடை வெயிலின் காரணமாக நிலத்தில் உள்ள ஈரப்பதம் விரைவாக குறைந்திட வாய்ப்பு உள்ளதால் தேங்காய் மட்டை, நார்களைக் கொண்டு மா, பலா, வாழை, பழ வகைச் செடிகள், மலர் செடிகள் உள்ளிட்ட சாகுபடி பயிர்களின் அடிப்பகுதிகளை சுற்றிலும் தரையில் பரப்பி வைத்து மூடாக்கு அமைத்திடலாம்.

அதிக நீர் தேவையின்றி குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய எள் பயிரையும் கோடையில் சாகுபடி செய்யலாம். எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை அளவே போதுமானதாகும். எள் பயிர் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக் கூடியது. திறந்த வெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள், நிலக்கடலை மற்றும் பயறு வகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.

மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு வேளாண் வானிலை மையத்தின் www.agritech.tnau.ac.in என்ற இணையதளத்தில் சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் மையத்தால் வழங்கப்படும் வானிலை முன் அறிவிப்பினை தங்களது செல்போனில் இருந்தவாறு பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப வேளாண் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story