கோடை விடுமுறை : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குமரியில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்குப் படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள்.

இந்த நிலையில், கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏரானமான சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குழந்தைகளுடன் சூரிய உதயத்தை காண குவிந்தனர். அவர்கள் இதற்காக அமைக்கப்பட்ட கேலரியில் அமர்ந்து சூரிய உதயத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர். தொடர்ந்து, கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு மூலம் செல்ல பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

Tags

Next Story