மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர் சுணக்கம்!

மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர் சுணக்கம்!

தேசிய நெடுஞ்சாலை

மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர் சுணக்கம்! ஆறுவழிச் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய மேம்பாலங்களின் கட்டுமான பணியை ஒப்பந்ததாரர் முடிக்காமல் சுணக்கம் காட்டி வருவதால், ஆறுவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் -பொன்னேரிக்கரை, பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்பு கடவுப்பாதைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன. விபத்தை தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழி சாலையாகவும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளன. மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் 2022ம் ஆண்டு பணி துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும்.

Tags

Next Story