சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முப்பெரும் விழா!

சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முப்பெரும் விழா!

வாலாஜா சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார்.


வாலாஜா சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு தலைமை செயலர் இறையன்பு கலந்து கொண்டு முதலாவதாக ஹார்மணி ஹால் என்ற கலையரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன், இறையன்பு ஆகியோர் பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவன் ஹேமனை பாராட்டி காந்தி கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசை வழங்கினர்.

பிள்ளைகளை கையாளும் கலை குறித்து பெற்றோருக்கான பயிற்சி நடந்தது. இதில் இறையன்பு பேசுகையில்,"பெற்றோர் குழந்தைகளுக்கு மரியாதை, போதுமான இடைவெளி, கவனிப்பு, நம்மை பற்றி பகிர்தல், பொறுப்பு, பாராட்டு, உறுதி ஏற்பது, மன்னித்தல், போதுமான சுதந்திரம், நாமே முன்மாதிரியாக இருத்தல் ஆகிய 10 பரிசுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பீடு செய்தல் கூடாது.

பெற்றோர்கள் தங்களது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை குழந்தைகளிடம் கூற வேண்டும். குழந்தைகளின் சந்தேகங்களை கேட்டறிய வேண்டும்,"என்றார். விழாவில் பள்ளி முதல்வர், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு விருந்தினரை மாணவி தர்ஷிணி அறிமுகம் செய்தார். முடிவில் மாணவி அஸ்மிதா நன்றி கூறினார்.

Tags

Next Story