குப்பையால் சீரழிகிறது சுந்தரேசனார் கோவில் குளம்

குப்பையால் சீரழிகிறது சுந்தரேசனார் கோவில் குளம்

சுந்தரேசனார் கோவில் குளம்

பள்ளிப்பட்டு அருகே சுந்தரேசனார் கோவில் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிப்பேட்டையில், 18,000 பேர் வசித்து வருகின்றனர். நெசவு தொழிலை பிரதான கொண்டு இந்த கிராமத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் நெல்லிக்குன்றம் முருகர் கோவில், வள்ளலார் மடம், கிருஷ்ணர் கோவில், கல்யாண சுந்தரேசனார் கோவில் என பல்வேறு கோவில்கள் உள்ளன. இதில், மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ள கல்யாண சுந்தரேசனார் கோவில், அசல் கிராமத்தின் அடையாளமாக விளங்குகிறது.

கோவிலை ஒட்டிய குளம், கோவில் வளாகத்தில் பழமையான தென்னை மரங்கள் என அமைதியாக சூழலில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில், கோவில் எதிரேயும், குளக்கரையிலும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. சந்தைக்கு வருபவர்களால் கோவில் குளத்தில் குப்பை குவிகிறது. காற்றில் பறக்கும் இலை சருகு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், குளத்தில் குவிந்துள்ளன. இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவில் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story