கடலில் மூழ்கிய கண்ணாடியிழைப் படகு; மீனவர் மாயம்

மல்லிப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கண்ணாடியிழைப் படகு கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிர் தப்பினர்; ஒருவரைக் காணவில்லை.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கண்ணாடியிழைப் படகு கடலில் மூழ்கியதில் மூன்று மீனவர்கள் உயிர் தப்பினர். ஒருவரைக் காணவில்லை.

மல்லிப்பட்டினம் கள்ளிவயல்தோட்டத்தில், நாகை மாவட்டம் சாமந்தன்பேட்டையை சேர்ந்த மீனவர் விஜயகுமார் தங்கியிருந்து அவருக்கு சொந்தமான கண்ணாடியிழை படகில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார் . இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அவருக்கு சொந்தமான கண்ணாடியிழை படகில் பழனிச்சாமி (70), ஆரோக்கியம் (45), அந்தோணிராஜன் (43) விஜயராகவன் (20) ஆகிய நான்கு பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரையிலிருந்து 5 பாகம் தூரத்தில் மூன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென வீசிய காற்றால் படகு கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது. படகுடன் கடலில் மூழ்கிய நான்கு பேரில் அந்தோணியை தவிர மூன்று பேரும் அருகில் இருந்த படகின் உதவியுடன் மூழ்கிய படகையும் மீட்டு வேதாரண்யம் அருகே கரை ஏறி புதன்கிழமை காலை மல்லிப்பட்டினம் வந்தனர். காணாமல் போன அந்தோணியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது .

Tags

Next Story