பார் உரிமையாளர்கள் தாக்கியதில் சப்ளையர் உயிரிழப்பு

பார் உரிமையாளர்கள் தாக்கியதில் சப்ளையர் உயிரிழப்பு

கைது

வாளையார் அருகே வாடிக்கையாளர் தவற விட்ட பர்ஸை எடுத்து மறைத்ததால் பார் உரிமையாளர்கள் தாக்கியதில் சப்ளையர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:கே.ஜி.சாவடியை சேர்ந்த மணிகண்டன் வாளையார் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த இரண்டு மாதங்களாக சப்ளையராக வேலை செய்து வந்துள்ளார்.பத்து நாட்களுக்கு முன் மது அருந்த வந்த நபர் ஒருவர் போதையில் மணிபர்சை தவறவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து தேடியவர் சப்ளையர் மணிகண்டனிடம் கேட்டு உள்ளார்.தனக்கு தெரியாது என மணிகண்டன் கூறியதை அடுத்து பார் உரிமையாளர்களான சதிஷ்குமார்,ஸ்டாலின் ஆகியவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

பாரில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சப்ளையர் மணிகண்டன் பர்சை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.முதலில் பர்சை எடுக்கவில்லை என மறுத்த மணிகண்டன் பின்னர் தான் எடுத்ததை ஒப்பு கொண்ட நிலையில் தவறவிட்ட நபரிடம் பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது.அதில் ஆயிரம் ரூபாய் குறைவாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து உரிமையாளர்கள் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.பின்னர் மணிகண்டனை வாளையார் பகுதிக்கு அழைத்து சென்ற சதீஷ்குமா,ஸ்டாலின் மார்றும் அவரது நண்பர்கள் எதற்காக பொய் சொன்னாய் என கேட்டு மணிகண்டனை தாக்கியதில் அவர் மயக்கமடைந்த நிலையில் அவரை பாரில் படுக்க வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது மணிகண்டனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாரின் விசாரணையில் தாக்குதலில் தலையில் காயம் ஏற்பட்டு மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிமையாளர் சதீஷ்குமார்,ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்கள் கண்ணன்,துரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story