ராஜபாளையத்தில் விவசாயிகளுக்கு விவசாய பொருட்கள் வழங்கல்

ராஜபாளையத்தில் விவசாயிகளுக்கு விவசாய பொருட்கள் வழங்கல்

விளை பொருட்கள் வழங்கல்

ராஜபாளையத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு எம்எல்ஏ தங்கபாண்டியன் தனது மாத ஊதியத்தில் இருந்து 160 விவசாயிகளுக்கு விவசாய பொருட்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்பி ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏ தங்கபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் அரசாங்கம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சலுகைகள் குறித்தும், விவசாய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும், அரசின் சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினர்.

அடுத்ததாக பேசிய தென்காசி தொகுதி எம்பி ராணி ஸ்ரீகுமார் மற்றும் எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகியோர் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குறித்து பேசினார்கள். இதனைத் தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ராஜபாளையம் தொகுதியை சுற்றியுள்ள 30 கிராமங்களில் வசிக்கும் 160 சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் 80 பண்ணை கருவிகள், 10 தார்பாய்கள், 20 மின்கல தெளிப்பான்கள்,

70 பழக் கன்றுகளுக்கான பங்குத் தொகை ₹. 2.10 லட்சத்தை எம்எல்ஏ தங்கபாண்டியன் தனது இரண்டு மாத ஊதியத்தில் இருந்து வழங்கி வேளாண் பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சி தொடக்கத்தில் சிறுதானிய வகைகள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் குறித்த விவசாய கண்காட்சி நடைபெற்றது.

Tags

Next Story