போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், ஜூஸ், பழங்கள் வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், ஜூஸ், பழங்கள்  வழங்கல்

சேலம் மாநகரில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், ஜூஸ், பழங்கள் வழங்கப்பட்டது

சேலம் மாநகரில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், ஜூஸ், பழங்கள் வழங்கப்பட்டது

சேலம் மாநகரில் கோடை வெயிலில் மக்கள் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், ஜூஸ், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், பழங்கள், ஜூஸ் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு, போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் தென்னரசு, மக்களின் சேவகன் அறக்கட்டளை நிறுவனர் அழகாபுரம் ஜெ.மோகன் மற்றும் அறக்கட்டளையினர், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் போலீசாருக்கு வெயிலில் இருந்து தற்காக்கும் வகையில் சோலார் தொப்பியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி குறித்து அழகாபுரம் ஜெ.மோகன் கூறுகையில், கோடைகாலம் முடியும் வரை மாநகரில் பணிபுரியும் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் நீர்மோர், பழங்கள், ஜூஸ் வழங்க எங்களது அறக்கட்டளையினர் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கி இருக்கிறோம் என்றார்.

Tags

Next Story