கோட்டாறு அரசு மருத்துவ கல்லூரியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

கோட்டாறு அரசு மருத்துவ கல்லூரியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

கோட்டாறு அரசு மருத்துவ கல்லூரியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.


கோட்டாறு அரசு மருத்துவ கல்லூரியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. தற்போது கோடையில் இந்த அணை வறண்டு, அணை நீர்மட்டம் சரிந்து உள்ளதால் புத்தன் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணிமேடை பகுதியில் குடிநீர் கொண்டு செல்லப்படும் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கோட்டாறு, மீனாட்சிபுரம், நாகராஜ கோவில் ரத வீதி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இன்னும் இந்த பணி முடியடைவில்லை. இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மருத்துவமனை டேங்கை நிரப்பி பம்பு செய்து தண்ணீர் வினியோம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தண்ணீர் கொண்டு வந்து டேங்கில் நிரப்பப்பட்டது. குழாயில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சரி செய்யும் வரை நாள்தோறும் லாரி மூலம் குடிநீர் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story