மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கல்

மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கல்

கன்னியாகுமரி

மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்கள் கலெக்டர் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை விவசாயிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து இயந்திரங்கள் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 10 எண்ணம் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 1.60 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு புல் நறுக்கும் கருவியின் விலை ரூ.30,750/- இதில் அரசு 50% மானியத் தொகையாக ரூ.15,375/-னை வழங்குகிறது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் 10 பயனாளிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்களை வழங்கினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பாராமரிப்புத்துறை) மரு.இராதாகிருஷ்ணன், துணை இயக்குநர் (கூ/பொ) மரு.அ.சந்திரசேகர், உதவி இயக்குநர் மரு.சி.சுப்பிரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.சு.ராமேஷ், மரு.ஜே.லிடியா, மரு.அமுதவல்லி, மரு.மு.இசக்கிராஜன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story