அரசு பள்ளிக்கு அறைக்கலன்கள் வழங்கல்

அரசு பள்ளிக்கு அறைக்கலன்கள் வழங்கல்

டெஸ்க் பெஞ்ச் வழங்கல் 

தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் டெஸ்க் பெஞ்ச் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள சம்பா நெட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் அமர்வதற்க்கான டெஸ்க் பெஞ்ச் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கும் நிகழ்வு ரோட்டரி துணை ஆளுனர் ஆணி முத்து வெற்றிவேலன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் சேசுராஜ் முன்னிலை வகித்தார்.செயலாளர் திருச்செல்வம், சேசு ரெத்தினம் கார்த்திகேயன், அன்புநாதன் உட்பட பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.

Tags

Next Story