மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை வழங்கல்

மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை வழங்கல்

 விதை வழங்கல்

சங்ககிரி: வேளாண்மை துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை வழங்கல்...‌
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழக முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உற்பத்தினை ஊக்கிவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, இதனையடுத்து மண் வளத்தை காக்கும் வகையில் தேவூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பசுந்தாள் உர விதைகள்(தக்கை பூண்டு விதைகள்) 50சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை வழங்கடபட்டது, இதில் சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குநர் விமலா தலைமையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கினார், இதில் தேவூர் உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன், ரமேஷ், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வயல்களில் பசுந்தாள் விதை விதைத்து 35 முதல் 45 நாட்களில் வளர்ந்து வருகிறது. மேலும் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது பல விதமான அமிலங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் வெளியிடப்படுகின்றன,இவை மண்ணில் கரையாத உள்ள ஊட்டசத்துகளை எளிதில் கிடைக்க செய்கிறது. பசுந்தாள் உரம் பயிரிடுவதால் மண் வளம் அதிகரிப்பதுடன் உர செலவு குறைகிறது, அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஒரு ஏக்கருக்கு 20கிலோ வீதம் விதை பெறலாம் என விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Tags

Next Story