தம்பிப்பேட்டை பள்ளியில் பருவ பாடபுத்தகங்கள் வழங்கல்

தம்பிப்பேட்டை  பள்ளியில் பருவ பாடபுத்தகங்கள்  வழங்கல்
X

பாட புத்தகங்கள் வழங்கல் 

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டை காலனி பள்ளியில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தம்பிப்பேட்டை காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இலவச மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags

Next Story